/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் பெண் பலி லாரி டிரைவர் கைது
/
விபத்தில் பெண் பலி லாரி டிரைவர் கைது
ADDED : ஜூலை 09, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, நரசிங்கபுரத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் மகள் பிரியா. கடந்த, 6ல், வாழப்பாடி, மத்துார் பிரிவு சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதற்கு காரணம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பள்ளமா, லாரியா என, ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்தனர்.
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், நேற்று முன்தினம், சம்பவ இடத்தில் இருந்த பள்ளத்தை தார் கொட்டி சீரமைத்தனர். தொடர்ந்து லாரி டிரைவரான, தர்மபுரி மாவட்டம் தேவரசம்பட்டு அருகே அதியமான்கோட்டையை சேர்ந்த முருகன், 45, என்பரை, போலீசார் கைது செய்தனர்.