/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முகத்தை சிதைத்து லாரி டிரைவர் கொலை
/
முகத்தை சிதைத்து லாரி டிரைவர் கொலை
ADDED : ஜூலை 26, 2025 11:12 PM

சின்னசேலம்:கட்டிலில் துாங்கிய லாரி டிரைவர், கல்லால் முகம் சிதைத்து கொலை செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், லட்சியம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 48; லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி, 44. இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். மகேந்திரன், அடிக்கடி வெளிமாநிலங்களுக்கு சென்று வருவது வழக்கம்.
பெங்களூரை சேர்ந்த பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.
ஒராண்டாக மகேந்திரன், மனைவி சரஸ்வதியுடன் சேர்ந்து வாழ்ந்தார். ஆயினும், தம்பதி இடையே பிரச்னை இருந்தது.
நேற்று முன்தினம் இரவு, மகேந்திரன், வீட்டுக்கு வௌியே கட்டிலில் துாங்கினார். அதிகாலை உறவினர்கள் பார்த்தபோது, மகேந்திரன் கல்லால் தாக்கி முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சின்னசேலம் போலீசார் விசாரி த்தனர். மகேந்திரனின் மனைவி சரஸ்வதி, 44, அவரது மகள் தீபிகா, 22, மருமகன் அப்பு ராவணன், 24, ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

