/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டூவீலர் மீது லாரி மோதிவிபத்து: முதியவர் பலி
/
டூவீலர் மீது லாரி மோதிவிபத்து: முதியவர் பலி
ADDED : ஏப் 26, 2025 01:20 AM
ராசிபுரம்:வெண்ணந்துார், நெ.3. கொமராபாளையம், கோம்பைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 65; கூலித் தொழிலாளி. இவரது பேத்தி லாவண்யா, 16; கோடை விடுமுறை விடப்பட்டதால், உறவினர் வீட்டில் விடுவதற்காக டூவீலரில் அழைத்துக்கொண்டு, ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டிக்கு சென்று  கொண்டிருந்தார். அப்போது, அத்திபலகானுர் அருகே, எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதியது.
இதில், முதியவர் ராமசாமி மீது டிப்பர் லாரியின் பின் சக்கரம் ஏறியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியில் ராமசாமி பலியானார். லாவண்யா, காயங்களுடன் உயிர்  தப்பினார். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

