தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/20 மாடுகளை ஏற்றிச்சென்றதால் லாரி பறிமுதல்; 2 பேருக்கு வலை

20 மாடுகளை ஏற்றிச்சென்றதால் லாரி பறிமுதல்; 2 பேருக்கு வலை

20 மாடுகளை ஏற்றிச்சென்றதால் லாரி பறிமுதல்; 2 பேருக்கு வலை


ADDED : ஜூன் 13, 2026 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்; மேச்சேரி, கம்மம்பட்டி அடுத்த எருமப்பட்டியை சேர்ந்த வக்கீல் செந்தில், 40. 'இந்திய புளூகிராஸ்' அமைப்பில் உறுப்பினராக உள்ளார்.

இவர் நேற்று மதியம், 1:00 மணிக்கு, தொப்பூரில் இருந்து மேச்சேரி நோக்கி மொபட்டில் சென்று-கொண்டிருந்த போது, முன்புறம், 20 மாடுகளுடன் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை, மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தடுத்து நிறுத்தி, செந்தில் விசாரித்தபோது, ஆந்-திராவில் இருந்து கேரள மாநிலத்துக்கு லாரி செல்வது தெரிந்தது.தொடர்ந்து அவர், 'லாரியில் மாடுகளை அள-வுக்கு அதிகமாக ஏற்றிச்செல்வதோடு, உரிய தீவனம், தண்ணீர் கொடுக்காமல் சித்ரவதை செய்து அனுமதியின்றி கொண்டு செல்கின்றனர்' என, மேச்சேரி போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார், மாடுகளுடன் லாரியை பறிமுதல் செய்து, ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவர், உரி-மையாளர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us