ADDED : ஜூன் 13, 2026 02:59 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்; பெத்தநாயக்கன்பாளை யம், கரியகோவில் பகுதி யை சேர்ந்த, கூலித்தொழிலாளி முருகன், 36. இவர் நேற்று முன்தினம் தும்பல் அரசு மேல்நி-லைப்பள்ளி அருகே நின்றிருந்தார்.
அங்கு வந்த ஒருவர், மது பாட்டிலால் முருகன் தலையில் தாக்கி, அவரிடம் இருந்த, 10,000 ரூபாயை பறித்துச்சென்றார். காயம் அடைந்த முருகன், பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் தும்-பலை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெயபிரகாஷ், 36, என்பவரிடம், நேற்று முன்தினம் ஒருவர், 1,500 ரூபாயை பறித்துச்சென்றார்.
இரு சம்பவங்கள் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்ததில், தும்பல், ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த சுரேந்தர், 19, என்பவர், இருவரிடமும் பணம் பறித்தது தெரியவந்தது. நேற்று அவரை, போலீசார் கைது செய்தனர்.
