/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனியார் நிறுவனத்தில் காதல்: போலீசில் ஜோடி தஞ்சம்
/
தனியார் நிறுவனத்தில் காதல்: போலீசில் ஜோடி தஞ்சம்
ADDED : ஏப் 21, 2025 07:19 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், பாப்பம்பாடியை சேர்ந்தவர் இளவரசி, 19. பிளஸ் 2 முடித்த இவர், சேலம், எருமாபாளைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் மேச்சேரியை சேர்ந்த பி.இ., பட்டதாரி பிரவீன், 26, சூப்பர்வைசராக உள்ளார்.
ஒரே பிரிவை சேர்ந்த இருவரும் பழக்கம் ஏற்பட்டு, ஓராண்டாக காதலித்தனர். இது இளவரசி வீட்டுக்கு தெரிந்து, அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இருவரின் பெற்றோரை அழைத்து போலீசார் பேசியதில், இளவரசி பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் பிரவீனுடன் அனுப்பிவைத்தனர்.