ADDED : அக் 08, 2026 02:55 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார், முல்லைவாடியை சேர்ந்த, சின்னதுரை மகன் பாலமு-ருகன், 23. டிப்ளமோ படித்துவிட்டு, ஆத்துாரில் உள்ள தனியார் இருசக்கர விற்பனை நிலையத்தில் பணிபுரிகிறார். பெரம்பலுார் மாவட்டம் லப்பைகுடிகாடை சேர்ந்த, ராமர் மகள் சவுமியா, 19. செவிலியர் பயிற்சி முடித்துவிட்டு, ஆத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியையாக பணிபுரிந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்-தனர். கடந்த, 5ல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திரு-மணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு ஆத்துார் டவுன் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரை அழைத்து, போலீசார்
பேச்சு நடத்தினர். பின் சவுமியாவை பாலமுருகனுடன் அனுப்-பினர்.
