/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வக்கீலை தாக்கிய மேச்சேரி போலீஸ் சேலம் மாவட்டத்தில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
/
வக்கீலை தாக்கிய மேச்சேரி போலீஸ் சேலம் மாவட்டத்தில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
வக்கீலை தாக்கிய மேச்சேரி போலீஸ் சேலம் மாவட்டத்தில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
வக்கீலை தாக்கிய மேச்சேரி போலீஸ் சேலம் மாவட்டத்தில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
ADDED : அக் 01, 2024 07:13 AM
சேலம்: மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில், வக்கீல் பகத்சிங் என்பவர் தாக்-கப்பட்டதை கண்டித்து, சேலம் மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் நீதிமன்ற வளாகம், வக்கீல் சங்க அலுவலகம் முன், சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்-பட்டது. அவர் கூறியதாவது:
ஒரு சிவில் வழக்கு சம்பந்தமாக, சேலம் வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த பகத்சிங், போலீஸ் ஸ்டேஷனில், கட்டப்பஞ்சாயத்து செய்ததை கண்டித்து, சட்ட ரீதியாக எதிர்ப்பு தெரிவித்தார். அவரை உள்ளே இழுத்து, 3 மணி நேரம் சிறைப்படுத்தி, மொபைல் போனை பிடுங்கி, அவமானப்படுத்தியுள்ளனர். இதை கண்டித்து, சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், வாழப்பாடி, ஆத்துார், மேட்டூர், ஓமலுார், சங்ககிரி, இடைப்பாடி தாலுகா நீதி-மன்ற வக்கீல்கள் சங்கம் உள்பட 5,000க்கும் மேற்பட்டோர் பணி-புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.போலீசாரின் அராஜகம், கட்ட விழித்து விடப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, முறைகேடாக சம்பாதிக்கின்றனர். தடுக்க சென்றால் வக்கீல்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். வக்கீல் பகத்சிங் மீது தாக்குதல் நடத்திய மேச்சேரி எஸ்.ஐ., சுதாகர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியான போராட்டம், டி.ஜி.பி.,யை சந்தித்து புகார் தெரிவிப்போம். இவ்வாறு கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி கூறுகையில்,''சேலம் மாவட்டத்தில் வக்கீல்கள் மீது, போலீசார் தாக்குதல் நடத்தும் சம்-பவம் அதிகரித்து வருகிறது. போலீஸ்-வக்கீல்களுக்கு இடையே அமைதி ஏற்படுத்த, மாவட்ட நீதிபதி தலைமையில் ஒருங்கி-ணைப்பு குழு அமைக்க வேண்டும்,'' என்றார்.சேலம் வக்கீல்கள் சங்க செயலர் நரேஷ்பாபு உள்ளிட்ட திரளான வக்கீல்கள் பங்கேற்றனர்.