/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் வழியே மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்
/
சேலம் வழியே மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்
ADDED : அக் 01, 2024 07:19 AM
சேலம்: சேலம் வழியே, மதுரை-கான்பூர் சிறப்பு வார ரயில் அறிவிக்கப்-பட்டுள்ளது.கான்பூர்-மதுரை சிறப்பு வார ரயில், அக்., 9 முதல், ஜனவரி 1 வரை, புதன்கிழமைகளில் மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு வாரங்கல், விஜயவாடா, ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்-பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், கிணத்துக்க-டவு, பொள்ளாச்சி வழியே வெள்ளிக்கிழமை காலை, 9:30 மணிக்கு மதுரை சென்றடையும். சேலம் ஜங்ஷனுக்கு வெள்ளி அதிகாலை, 12:37 மணிக்கும், ஈரோடுக்கு, 1:45 மணிக்கும் வந்து செல்லும்.
மதுரை-கான்பூர் சிறப்பு வார ரயில், அக்., 11 முதல், ஜன., 3 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11:35 மணிக்கு கிளம்பி, போத்-தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே ஞாயிறு இரவு, 10:20 மணிக்கு கான்பூர் சென்றடையும். ஈரோடு ஜங்ஷனுக்கு சனிக்கி-ழமை காலை, 6:15 மணிக்கும், சேலம் ஜங்ஷனுக்கு, 7:22 மணிக்கும் வந்து செல்லும்.இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.