/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பள்ளியில் 'மகிழ் முற்றம்' தொடக்கம்
/
அரசு பள்ளியில் 'மகிழ் முற்றம்' தொடக்கம்
ADDED : ஜூலை 12, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி, நங்கவள்ளி, வீரனுார் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில், 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கு, 'மகிழ் முற்றம்' மாணவர் குழு பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியை ரேவதி(பொ) தலைமை வகித்தார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய குழுக்களுக்கு, தலா, 2 மாணவர்கள், ஒரு பொறுப்பாசியர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆசிரியர்கள், மேலாண் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கற்றல் திறன் மேம்படுத்தல், விடுப்பு எடுப்பதை குறைத்தல், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்குதல், தலைமை பண்பை வளர்த்தல், ஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்தல் உள்ளிட்டவை, இந்த அமைப்பின் நோக்கம் என, ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.