/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேக்னசைட் தொழிலாளர்கள் போனஸ் கேட்டு முற்றுகை
/
மேக்னசைட் தொழிலாளர்கள் போனஸ் கேட்டு முற்றுகை
ADDED : அக் 15, 2025 01:43 AM
சேலம், சேலம், குரும்பப்பட்டியில் உள்ள, தமிழக மேக்னசைட் நிறுவனத்தில், 400க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதில், 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், தீபாவளி போனஸ் கேட்டு, பா.ம.க., தொழிற்சங்க பொதுச்செயலர் சதாசிவம் தலைமையில் நேற்று, மேக்னசைட் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து, சதாசிவம் கூறுகையில், ''வெள்ளைக்கல், டுனைட் கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்க, ஒப்பந்ததாரர் மறுத்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த முத்தரப்பு பேச்சில், 8.3 சதவீத போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி போனஸ் தொகை, 3 மாத சம்பள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். இல்லையெனில் ஒட்டுமொத்த சுரங்க பணிகளை நிறுத்தி விட்டு, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.