ADDED : ஆக 11, 2024 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே நத்தக்கரையில் உள்ள மூப்பனார், மகா மாரி-யம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சக்தி அழைத்தலுடன் திரு-விழா தொடங்கியது.
தொடர்ந்து மூப்பனாருக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு மாரி-யம்மன் சுவாமிக்கு பொங்கல் வைத்தல் நடந்தது. மாரியம்மன், விநாயகர், காத்தவராயன் சுவாமிகள் அன்னம், குதிரை, எலி வாக-னங்களில் திருவீதி உலா நடந்தது. இன்று அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், உருளுதண்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 13ல் மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது.