/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உலக நன்மை வேண்டி மகா சுதர்சன யாகம்
/
உலக நன்மை வேண்டி மகா சுதர்சன யாகம்
ADDED : ஏப் 24, 2025 01:15 AM
சேலம்:
சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 36ம் ஆண்டு சித்திரை பிரமோற்சவம், எம்பெருமானார் உற்சவங்களை முன்னிட்டு, நேற்று காலை, மகா சுதர்சன யாகம் நடந்தது.உலக நன்மை வேண்டியும், அனைத்து உயிர்களும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டியும், கண்ணன், வேதமூர்த்தி பட்டாச்சாரியார்கள் தலைமையில், 108 மூலிகைகளால் நடந்த யாகம், மதியம் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.
அதில் வைத்து பூஜித்த கலசங்களில் இருந்த புனிதநீரால் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜருக்கு திருமஞ்சனம் செய்து சர்வ அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடந்தது.
மேலும், 10 நாட்கள் நடக்கும் எம்பெருமானார் உற்சவத்தை, கோஷ்டியார்கள் பிரபந்த சேவை பாராயணம் செய்து தொடங்கினர். இரவு, 8:00 மணிக்கு திருவாராதனம், பூஜை செய்யப்பட்டது.

