/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேலைக்காரி கைது; 3 பேரிடம் 'கிடுக்கி'
/
வேலைக்காரி கைது; 3 பேரிடம் 'கிடுக்கி'
ADDED : மே 10, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், பொன்னம்மாபேட்டை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபுலால், 60.
வெள்ளி விற்பனை, ஜவுளி ஏற்றுமதி, வட்டிக்கு பணம் கொடுத்தல் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். இவரது வீட்டில், 60 பவுன், 65 லட்சம் ரூபாய், 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது, கடந்த, 7ல் தெரியவந்தது. அம்மாபேட்டை போலீசார் விசாரணையில், வீட்டு வேலைகளை கவனித்து வந்த வள்ளி, 58, மூலம் திருட்டு நடந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரது தோழி, மேலும் இரு ஆண்களிடம், 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து ஆம்னி வேன், வெள்ளி பொருட்கள், நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.