/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
/
ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
ADDED : நவ 22, 2024 01:32 AM
ரவுடி கொலை வழக்கில்
முக்கிய குற்றவாளி கைது
அயோத்தியாப்பட்டணம், நவ. 22-
ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் குமார், 32; நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்றார். அப்போது வீராணத்தை சேர்ந்த ரவுடி சக்திவேல், 37, அவரது நண்பர்களான பாக்யராஜ், குமார் உள்ளிட்டோர், கத்தியை காட்டி மிரட்டி, 3,200 ரூபாயை பறித்துச்சென்றனர். இதுகுறித்த புகார்படி காரிப்பட்டி போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் சக்திவேலை கைது செய்து, மற்ற இருவரை தேடுகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சக்திவேல் மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளன. குறிப்பாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட ரவுடி காட்டூர் ஆனந்தன் வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி. தற்போது வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்' என்றனர்.