/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.14.71 லட்சத்துக்கு மக்காச்சோளம் ஏலம்
/
ரூ.14.71 லட்சத்துக்கு மக்காச்சோளம் ஏலம்
ADDED : ஜன 02, 2024 12:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, அம்மம்பாளையம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. நேற்று இங்கு ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள், 250 மூட்டை மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மக்காச்சோளம் குவிண்டால், 2,279 முதல், 2,281 ரூபாய் வரை விற்பனையானது. 250 மூட்டை மக்காச்சோளம், 5.50 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடந்தது.
அதேபோல், கெங்கவல்லி வேளாண் ஒழுங்குமுறை கூடத்தில், 480 மூட்டை விற்பனைக்கு வந்தது. மக்காச்சோளம் குவிண்டால், 2,200 முதல், 2,270 ரூபாய் வரை விற்பனையானது. 480 மூட்டைகள், 9.21 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடந்தது.

