/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மயில்கள் கூட்டத்தால் மக்காச்சோளம் சேதம்
/
மயில்கள் கூட்டத்தால் மக்காச்சோளம் சேதம்
ADDED : ஆக 28, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டு கோம்பைக்காட்டில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது சோளக்கதிர் உற்பத்தியாகி, முதிர்வடையும் நிலையில் உள்ளது. ஆனால் மயில்கள் கூட்டம், கூட்டமாக வயலில் புகுந்து, மக்காச்சோளத்தை கொத்தி சாப்பிடுகின்றன.
சோகையை விலக்கி பார்த்தால் மக்காச்சோளம் மணிகள் இல்லாமல், வெறும் கதிர்களாக மட்டும் உள்ளன. ஒருபுறம் விரட்டினால், வயலின் மறுபுறத்தில் புகுந்து விடுகிறது. ஒரு காலால், சோளத்தட்டை மண்ணில் சாய்த்து விடுகின்றன.
மயில் கூட்டத்தால், மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் துாக்கமின்றி தவிக்கின்றனர்.