/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ட்ரோன்' மூலம் தெளிக்க 'மக்காச்சோள மேக்சிம்' திரவம்
/
'ட்ரோன்' மூலம் தெளிக்க 'மக்காச்சோள மேக்சிம்' திரவம்
'ட்ரோன்' மூலம் தெளிக்க 'மக்காச்சோள மேக்சிம்' திரவம்
'ட்ரோன்' மூலம் தெளிக்க 'மக்காச்சோள மேக்சிம்' திரவம்
ADDED : நவ 28, 2024 01:14 AM
'ட்ரோன்' மூலம் தெளிக்க
'மக்காச்சோள மேக்சிம்' திரவம்
வீரபாண்டி, நவ. 28-
'ட்ரோன்' மூலம் தெளிக்க, 'மக்காச்சோள மேக்சிம்' திரவ ஊக்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டார வேளாண் அலுவலர் நிவேதாஸ்ரீ அறிக்கை: தமிழக வேளாண் பல்கலை, மக்காச்சோள பயிர்களுக்கு, 'ட்ரோன்' மூலம் தெளிக்கக்கூடிய, 'மக்காச்சோள மேக்சிம்' திரவ பயிர் ஊக்கியை அறிமுகம் செய்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் அடர் திரவத்தை, 19 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து, 20 லிட்டராக மாற்றி, 20 மி.லி., ஒட்டும் திரவத்தை கலந்து, பூக்கும் பருவத்திலும், மணி பிடிக்கும் பருவத்திலும், 'ட்ரோன்' மூலம் தெளிக்க வேண்டும்.
இதன் மூலம் வறட்சியை தாங்கி பயிர் வளர்வதோடு, மண்ணில் இருந்து ஊட்டச்சத்துகளை கிரகிக்கும் திறன், மணி பிடிக்கும் திறன் அதிகரித்து மகசூல், 20 சதவீதம் கூடுதலாக கிடைக்கும். ஒரு லிட்டர் மக்காச்சோள மேக்சிம் திரவம், 546 ரூபாய்க்கு கிடைக்கிறது. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.