ADDED : நவ 22, 2025 01:14 AM
சேலம், சேலம் இரும்பாலை அருகே மாரமங்கலத்துப்பட்டி பாரதி நகரை சேர்ந்த ராமன் மகன் செந்தில் குமார், 45. இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு ராமன் வெளியூர் சென்று விட்டார். வீட்டில் செந்தில்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
நேற்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்து அருகில் இருந்தவர்கள் இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கதவை உடைத்து சென்று பார்த்த போது, அழுகிய நிலையில் செந்தில்குமார் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் நலக்குறைவால் இறந்தாரா அல்லது தற்கொலை செய்த கொண்டாரா என்பது குறித்து இரும்பாைல, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்காடு ஏரியில் விடப்பட்ட

