/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மல்லுார் - இளம்பிள்ளை மினி பஸ் தொடக்கம்
/
மல்லுார் - இளம்பிள்ளை மினி பஸ் தொடக்கம்
ADDED : ஜூலை 03, 2025 02:15 AM
பனமரத்துப்பட்டி சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பாரப்பட்டி, பசுவநத்தம்பட்டி, மூக்குத்திபாளையம் வழியே மல்லுாருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. மூக்குத்திபாளையம், மல்லுார் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பால் சாலை குறுகிவிட, டவுன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மல்லுாரில் தனியார் மினி பஸ் போக்குவரத்தை, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், நேற்று தொடங்கி வைத்தார். அந்த பஸ் மூக்குத்திபாளையம், பசுவநத்தம்பட்டி, பாலம்பட்டி, விநாயகா மிஷன், இளம்பிள்ளை வரை இயக்கப்படுகிறது. இதில் மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார், தி.மு.க., ஒன்றிய செயலர் உமாசங்கர், பனமரத்துப்பட்டி நகர செயலர் ரவிக்குமார், சேலம் மாவட்ட மினி பஸ் சங்க தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.