/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயன்பாட்டுக்கு விடப்பட்ட மாமாங்கம் மேம்பாலம்
/
பயன்பாட்டுக்கு விடப்பட்ட மாமாங்கம் மேம்பாலம்
ADDED : ஆக 23, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், மாமாங்கத்தில் உள்ள, சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய அரசின் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 29 கோடி ரூபாய் மதிப்பில், 700 மீ.,க்கு, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி, 2 ஆண்டுக்கு மேலாக நடந்து முடிந்தது. இதனால் நேற்று, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.
மேலும் உறுதித்தன்மை, இடையூறு உள்ளதா என்பது குறித்து அறிய, அனைத்து வாகனங்களும் செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.