/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டு மனை தருவதாக மோசடி செய்தவர் கைது
/
வீட்டு மனை தருவதாக மோசடி செய்தவர் கைது
ADDED : நவ 22, 2024 06:47 AM
ஆத்துார்: ஆத்துார், புதுப்பேட்டையை சேர்ந்தவர் முத்துலிங்கம், 65. சேகோ ஆலை உரிமையாளரான இவர், 2023ல் அதே பகுதியை சேர்ந்த, ரியல் எஸ்டேட் உரிமையாளர் சுப்ரமணியம், 58, என்பவரிடம், வீட்டுமனை தொடர்பாக பேசியுள்ளார். அப்போது, ஆத்துார், வ.உ.சி., நகர், அன்பு நகரில் உள்ள வீட்டுமனையை, 50 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி, முன்பணம், 25 லட்சம் ரூபாயை சுப்ரமணியத்திடம் கொடுத்தார்.
ஆனால் வேறு நபருக்கு வீட்டு மனையை கொடுத்துள்ளார். பின் முத்துலிங்கத்திடம், வேறு மனை தருவதாக கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த நிலையில் முன் பணத்துக்கு காசோலை வழங்கியுள்ளார். அந்த காசோலை, வங்கியில் பணமின்றி திரும்பியது. இதுகுறித்து சுப்ரமணியத்திடம் கேட்டபோது, தகாத வார்த்தையில் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துலிங்கம் அளித்த புகார்படி, சுப்ரமணியத்தை நேற்று, ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர்.