ADDED : ஜூலை 10, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஆட்டையாம்பட்டி, கரிகட்டாம்பாளையம், கலையரசி காட்டை சேர்ந்தவர்கள் பிரகாஷ், 26. அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 36. இவரது மனைவி கீதா. இவரும், பிரகாஷூம், சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனை கேன்டீனில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் விஜயகுமார், கீதா இடையே கருத்து வேறுபாடால் பிரிந்தனர். இதற்கு பிரகாஷ் காரணம் என விஜயகுமார் நினைத்துள்ளார். இதனால் விஜயகுமார், நேற்று முன்தினம் மது போதையில், பிரகாஷ் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி, அங்கிருந்த மொபைல் போனை எடுத்துச்சென்றார். காயம் அடைந்த பிரகாஷ், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார், விஜயகுமாரை நேற்று முன்தினம் கைது செய்து மொபைல் போனை மீட்டனர்.