/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவிலில் நாகப்புற்றை சேதப்படுத்தியவர் கைது
/
கோவிலில் நாகப்புற்றை சேதப்படுத்தியவர் கைது
ADDED : நவ 08, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:தொளசம்பட்டி
அருகே அமரகுந்தியை சேர்ந்த, விவசாயி குப்புசாமி, 77. இவரது
நிலத்தில் உள்ள, பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் பூஜையும் செய்து
வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ், 40, என்பவர்
அக்கோவிலுக்கு சென்று, 'எனக்கும் பங்கு உண்டு' எனக்கூறி, நேற்று
முன்தினம் சுத்தம் செய்துள்ளார். இதில் குப்புசாமி - ராமதாஸ் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் ராமதாஸ், கோவிலில் இருந்த நாக
புற்றை சேதப்படுத்தியதோடு, என்னை தாக்கினாார் என, குப்புசாமி
தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ராமதாைஸ,
போலீசார் கைது செய்தனர்.

