/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வாட்டர் பெல்' திட்ட பிரசாரம் தி.மு.க., மாணவரணி முடிவு
/
'வாட்டர் பெல்' திட்ட பிரசாரம் தி.மு.க., மாணவரணி முடிவு
'வாட்டர் பெல்' திட்ட பிரசாரம் தி.மு.க., மாணவரணி முடிவு
'வாட்டர் பெல்' திட்ட பிரசாரம் தி.மு.க., மாணவரணி முடிவு
ADDED : நவ 08, 2025 05:21 AM
சேலம்:தி.மு.க.,வின்,
மாணவரணி மாவட்ட, மாநகர், மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்
கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் ராஜேந்திரன் தலைமை
வகித்தார். எம்.பி.,க்கள் செல்வகணபதி, சிவலிங்கம் முன்னிலை வகித்தனர்.
அதில்
தமிழக பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை செயல்டுத்த மாணவரணி
சார்பில் பிரசாரம் மேற்கொண்டு கட்சியினர், அந்தந்த மாவட்ட
பள்ளிகளில் செயல்படுத்துவதற்கான முயற்சி, திட்டத்தின்
பயன்பாட்டை எடுத்துரைத்தல்; முதல்
தலைமுறை பட்டதாரிகளை தேர்வு
செய்து, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற தேசிய மற்றும் உலக அளவில் சிறந்த
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ப்பது; துணை முதல்வர் பிறந்தநாளில்
மாவட்டந்தோறும் மாணவரணி சார்பில் கருத்தரங்கம் நடத்தல் உள்ளிட்ட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாணவரணி மாநில செயலர் ராஜூவ்காந்தி, துணை செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.