/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காதலிப்பதாக சிறுமியிடம் 30 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கியவர் கைது
/
காதலிப்பதாக சிறுமியிடம் 30 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கியவர் கைது
காதலிப்பதாக சிறுமியிடம் 30 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கியவர் கைது
காதலிப்பதாக சிறுமியிடம் 30 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கியவர் கைது
ADDED : ஜூலை 25, 2025 01:34 AM
மேட்டூர் மேட்டூர், சேலம் கேம்ப், பாரதி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி பாரதி, 39. அவரது தந்தை மணி, மகள் சித்திரிகா, 15, மகன் ரோஷன், 5. அதே பகுதியை சேர்ந்த ஜான் அலெக்சாண்டர் மகன் நிசாந்த் பிலிப், 19.கடந்த, 6ல், மணி, 'வீட்டில் பீரோவில் இருந்த, 30 பவுன் நகைகளை காணவில்லை' என, பாரதியிடம் கூறியுள்ளார்.
அவர், சித்திரிகாவிடம் கேட்டுள்ளார்.அப்போது சித்திரிகா, 'நிசாந்த் பிலிப் என்னை காதலிப்பதாக கூறினார். திருமணம் செய்ய, சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என கூறி, 30 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கிக்கொண்டார்' என கூறினார். இதுகுறித்து பாரதி, நேற்று அளித்த புகார்படி, கருமலைக்கூடல் போலீசார், நிசாந்த் பிலிப்பை கைது செய்தனர்.