/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பங்கு சந்தையில் லாபம் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
பங்கு சந்தையில் லாபம் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது
பங்கு சந்தையில் லாபம் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது
பங்கு சந்தையில் லாபம் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : டிச 10, 2024 07:45 AM
சேலம்: பங்கு சந்தையில் முதலீடு செய்து, லாபம் தருவதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்தவர் வெற்றிவேலன், 43, தங்கும் விடுதி உரிமையாளர். இவர் கடந்த ஆகஸ்டில், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், பங்கு சந்-தையில் முதலீடு செய்வது தொடர்பாக, ஆன்லைனில் பார்த்த-போது, அதன் மூலம் கிடைத்த ஒரு மொபைல் எண்ணை
தொடர்பு கொண்டு பேசினேன்.அவர், திருவள்ளூர் மாவட்டம், பாகசாலையை சேர்ந்த மனோஜ், 21, என்பது தெரியவந்தது. அவர், ஐந்து
லட்சம் ரூபாய் பங்கு சந்-தையில் முதலீடு செய்ய வழங்கினால், அதிக லாபம் பெற்று தரு-வதாக கூறினார்.
இதை நம்பி அவரின் வங்கி கணக்கிற்கு, ஐந்து லட்ச ரூபாய் வழங்கினேன். பணத்தை பெற்றுக் கொண்டு அவர்
எந்த பதிலும் தரவில்லை. மொபைல் போனையும், 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டார். எனவே, பணம் மோசடி செய்த
மனோஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, போலியாக இணையதளம்
உருவாக்கி, ஐந்து லட்ச ரூபாய் மோசடி செய்த மனோஜை நேற்று கைது செய்தனர்.