ADDED : டிச 24, 2024 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டி யில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்-பனை செய்வதாக, சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம்கோயலுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுபடி, தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆனந்தகுமார், 45, என்பவரது பீடா கடையில், போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த கடையில் விற்ப-னைக்கு வைத்திருந்த, 12 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த, ஆனந்தகு-மாரை, தம்மம்பட்டி போலீசார் கைது செய்தனர்.