/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது
/
சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது
ADDED : ஜூன் 07, 2025 01:13 AM
சங்ககிரி, சங்ககிரியில், சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சங்ககிரி எஸ்.ஐ., கண்ணன், ஏட்டு முருகன் ஆகியோர் நேற்று சங்ககிரி சந்தைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசாரிடம் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்கப்படுவதாகவும், அவற்றை தண்ணீரில் கலந்து போதை ஊசி போட்டு கொள்ள பயன்படுத்தி வருவதாகவும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள பழைய வி.ஏ.ஓ., அலுவலகம் அருகில் பஜாஜ் பிளாட்டினம் பைக்கை நிறுத்தியபடி இரண்டு பேர், போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். அதில் ஒருவரை பிடித்து விசாரித்ததில், சங்ககிரி, சந்தைபேட்டையை சேர்ந்த கஜேந்திரன் மகன் சபரீசன், 21, என்பதும்,போதை மாத்திரைகளை விற்று வந்தவர் எனவும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சங்ககிரி, வாணியர் காலனியை சேர்ந்த சிவக்
குமாரை தேடி வருகின்றனர்.