/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவர் மீது தாக்குதல் எதிரொலி டூவீலர்களை நொறுக்கியவர் கைது
/
மாணவர் மீது தாக்குதல் எதிரொலி டூவீலர்களை நொறுக்கியவர் கைது
மாணவர் மீது தாக்குதல் எதிரொலி டூவீலர்களை நொறுக்கியவர் கைது
மாணவர் மீது தாக்குதல் எதிரொலி டூவீலர்களை நொறுக்கியவர் கைது
ADDED : நவ 26, 2024 01:34 AM
மாணவர் மீது தாக்குதல் எதிரொலி
டூவீலர்களை நொறுக்கியவர் கைது
சேலம், நவ. 26-
சேலத்தில், ஆறு பைக்குளை அடித்து நொறுக்கியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், சேலம், தனியார் சட்டக்கல்லுாரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த, 23ம் தேதி ஊருக்கு செல்வதற்காக, புது பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சிலர் விக்னேஷிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். பின் அங்கிருந்து சென்றனர்.
இது குறித்து, விக்னேஷ் தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விக்னேசை தாக்கியது, தென் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஆனால், யார் தாக்கியது என தெரியாத நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு தென் அழகாபுரம் சென்ற நண்பர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த சத்தம் கேட்டு தினேஷ் என்பவர் வீட்டில் இருந்து வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார். அதற்குள் கல்லுாரி மாணவர்கள் அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து அழகாபுரம் போலீசில் தினேஷ் புகாரளித்தார். விசாரணையில், சஞ்சய், விஜயகுமார், விஷால், ஹரி, தங்கதுரை, ஆகாஷ் ஆகிய ஆறு பேரின் பைக்குகள் சேதமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த மாணவர் பாரதியை, போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.