/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் அரிசி பறிமுதல் வேனில் கடத்தியவர் கைது
/
ரேஷன் அரிசி பறிமுதல் வேனில் கடத்தியவர் கைது
ADDED : ஜூலை 06, 2025 01:17 AM
சேலம், சேலம் புட்செல் போலீசார், நேற்று கன்னங்குறிச்சி - வீராணம் பிரதான சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில், ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. தலா, 50 கிலோவில், 16 பைகளில், 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஓட்டி வந்தவர், கன்னங்குறிச்சி, சின்ன கொல்லப்பட்டி, பெரியார் நகரை சேர்ந்த நவீன்பிரசாத், 31, என தெரிந்தது. மக்களிடமும், ரேஷன் விற்பனையாளர்
களிடமும் குறைந்த விலைக்கு வாங்கி, அதை கோழி தீவனம், அரவை மில்லுக்கு அதிக விலைக்கு விற்று வந்ததாக, வாக்குமூலம் கொடுத்தார். வேனுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், நவீன் பிரசாத்தை கைது செய்தனர்.