/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
9 பவுன் தாலிக்கொடியை பறித்தவர் கைது
/
9 பவுன் தாலிக்கொடியை பறித்தவர் கைது
ADDED : நவ 30, 2024 02:41 AM
ஆத்துார்: ஆத்துார், காந்தி நகரை சேர்ந்த, மருத்துவர் விஸ்வநாதன் மனைவி
பத்மினி, 66.
இவர், கடந்த, 27ல், நரசிங்கபுரத்ததில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த நபர், பத்மினி அணிந்திருந்த, 9 பவுன் தாலிக் கொடியை பறித்துச்சென்றார். அவர் புகார்படி ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் இரு தனிப்படை அமைத்து விசா-ரணை
நடந்தது.
இந்நிலையில் நேற்று, மஞ்சினி சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்-ததில், சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த பத்மநாபன், 42, என்-பதும், பத்மினியிடம் தாலியை பறித்தவர் என்பதும் தெரிந்தது. அவரிடம், 7 பவுன் நகையை மீட்ட போலீசார், வழிப்பறிக்கு பயன்படுத்திய, 'ஸ்பிளண்டர்' பைக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை, கைது
செய்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'பத்மநாபன் மீது, 10 இடங்-களில் வழிப்பறி, திருட்டு தொடர்பாக வழக்குகள் உள்ளன' என்-றனர்.

