/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்வே ப்ளாட்பார்மில் தாலி பறித்தவர் கைது
/
ரயில்வே ப்ளாட்பார்மில் தாலி பறித்தவர் கைது
ADDED : செப் 01, 2025 04:11 AM
சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் அமிர்தம், 74. இவர் கடந்த, 23ல் குடும்பத்துடன், கேரள மாநிலத்துக்கு சென்றார். தொடர்ந்து ரயிலில் புறப்பட்டு, 27 அதிகாலை, 5:30 மணிக்கு சேலம் வந்தனர்.
அங்கு நடைமேடை, 1ல் உள்ள, 'லிப்ட்'டில் இறங்க முயன்ற-போது, ஒரு வாலிபர், 'லிப்ட் வேலை செய்யவில்லை. எஸ்க-லேட்டர் மூலம் செல்லுங்கள்' என அறிவுறுத்தினார். அதன்படி எஸ்கலேட்டரில் இறங்கியபோது, அமிர்தம் அணிந்திருந்த, தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு, அந்த வாலிபர் தப்பினார். இதுகுறித்து அமிர்தம் அளித்த புகார்படி, சேலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சேலம், மணியனுார், சண்முகா நகரை சேர்ந்த ரபீக்ராஜா, 29, என தெரிந்தது. நேற்று முன்தினம், அவரை கைது செய்த போலீசார், தாலியை
மீட்டனர்.