/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதுக்கடை முன் பைக் திருடியவர் சிக்கினார்
/
மதுக்கடை முன் பைக் திருடியவர் சிக்கினார்
ADDED : செப் 04, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார், சக்கரை செட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன், 42. காவலாளியாக பணிபுரிகிறார். கடந்த, 1ல், ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் உள்ள டாஸ்மாக் கடை முன், 'விக்டர்' பைக்கை சாவியுடன் வைத்துவிட்டு, உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்தார். அப்போது பைக்கை காணவில்லை.
அவர் புகார்படி, அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத ஒருவர், பைக்கை எடுத்துச்செல்வது பதிவாகி இருந்தது. பின் ஓமலுார் போலீசார் விசாரணையில், மேச்சேரி, அரங்கத்தை சேர்ந்த முருகன், 42, என தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்து பைக்கை
மீட்டனர்.