ADDED : ஆக 26, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலத்தில், கத்தியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம், அரூர், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 53. இவர் நேற்று காலை சேலம், ஜெயா தியேட்டர் சந்திப்பு அருகில் உள்ள காபி பார் அருகில், நடந்து சென்று கொண்டிருந்தார்.
அங்கு வந்த தலைவாசல், சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த ரவிகுமார், 41, என்பவர், கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து மாதேஸ்வரன் அளித்த புகார் அடிப்படையில், ரவிகுமாரை டவுன் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.