/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுவனை மலம் அள்ள வைத்தவர் வன்கொடுமை சட்டத்தில் கைது
/
சிறுவனை மலம் அள்ள வைத்தவர் வன்கொடுமை சட்டத்தில் கைது
சிறுவனை மலம் அள்ள வைத்தவர் வன்கொடுமை சட்டத்தில் கைது
சிறுவனை மலம் அள்ள வைத்தவர் வன்கொடுமை சட்டத்தில் கைது
ADDED : அக் 16, 2025 01:58 AM
ஓமலுார், 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை தாக்கி, மலத்தை அள்ள வைத்ததாக அளித்த புகாரில், வன்கொடுமை சட்டத்தில் முதியவரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, கொங்குபட்டி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 15 வயது மகன், அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறான். 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்ட அச்சிறுவன், நேற்று காலை, அருகே உள்ள தோட்டத்தில், மலம் கழித்துள்ளான்.
இதை, தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ரமேஷ், 51, பார்த்துள்ளார். தொடர்ந்து சிறுவனை வெளியே விடாமல், தோட்டத்தில் உள்ள அறையில் வைத்து பூட்டியுள்ளார். இதை அறிந்து சிறுவனின் பெற்றோர், அங்கு சென்று, ரமேஷிடம் கேட்டனர். அதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுவனின் பெற்றோர், தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், 'மகனை தாக்கி, கையால் மலத்தை அள்ளச்செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தனர். பின் சிறுவன், ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சேலம் வடக்கு மாவட்ட செயலர் தெய்வானை தலைமையில், வி.சி., கட்சியினர், சிறுவனின் குடுபத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து அக்கட்சியினர், 'சிறுவனை தாக்கி, மலத்தை அள்ள வைத்தவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தினர்.
இதனிடையே போலீசார், வன்கொடுமை சட்டத்தில் ரமேைஷ கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.