/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேகத்தடையில் ஏறியபோது தடுமாறி விழுந்தவர் பலி
/
வேகத்தடையில் ஏறியபோது தடுமாறி விழுந்தவர் பலி
ADDED : ஜூலை 14, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், தாண்டவராயபுரம், காமராஜ் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் தினேஷ்குமார், 27. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 8ல், 'பேஷன்' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் கல்பகனுார் சென்றார்.
அங்கிருந்து, ஆத்துார் நோக்கி, செல்லியம்பாளை-யத்தில் வந்து கொண்டிருந்தபோது, வேகத்தடையில் ஏறினார். அப்போது தடுமாறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசா-ரிக்கின்றனர்.