ADDED : ஆக 27, 2026 03:39 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி, மாடர்ன் தியேட்டர் பின்புறம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சத்திய சுப்ரமணியம், 45. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர், இரு ஆண்டுக்கு முன் வேலையை விட்டு நின்று விட்டு சேலத்தி-லேயே தங்கி இருந்தார்.
நேற்று வெகு நேரமாகியும் வெளியே வராததால் அருகில் இருந்த-வர்கள் மதியம், 2:00 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் இறந்து கிடந்தார். பின் கன்னங்குறிச்சி போலீசார் வந்து உடலை கைப்பற்றி விசாரிக்-கின்றனர்.
