/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விசாரணைக்கு ஆஜராகாதவர் 4 ஆண்டுக்கு பின் சிக்கினார்
/
விசாரணைக்கு ஆஜராகாதவர் 4 ஆண்டுக்கு பின் சிக்கினார்
விசாரணைக்கு ஆஜராகாதவர் 4 ஆண்டுக்கு பின் சிக்கினார்
விசாரணைக்கு ஆஜராகாதவர் 4 ஆண்டுக்கு பின் சிக்கினார்
ADDED : ஜன 03, 2026 07:30 AM
தலைவாசல்: தலைவாசல், லத்துவாடியை சேர்ந்த விவசாயி சசிகுமார், 44. இவர், 2011ல், லத்துவாடி பஸ் ஸ்டாப்பில், 1.10 லட்சம் ரூபா-யுடன் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த, 3 பேர், அவரை தாக்கி பணத்தை பறித்துச்சென்றனர்.
இந்த வழக்கில் திருச்சி மாவட்டம், துவாக்குடி, வாழவந்தான்-கோட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 40, செந்தில்குமார், 39, நந்தகுமார், 40, ஆகியோரை, அதே ஆண்டில் வீரகனுார் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, ஆத்துார் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த, 3 பேருக்கும், 2021 மார்ச், 20ல், ஆத்துார் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதில், 2025 நவ., 28ல், புதுக்கோட்டையில் இருந்த, செந்தில்கு-மாரை கைது செய்தனர். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன், நேற்று முன்தினம், பெரம்பலுார் மாவட்டம் அரும்பாவூர், வெங்கனுாரில் உள்ள மனைவியை பார்க்க வந்தார். இதை அறிந்த வீரகனுார் போலீசார் நேற்று, ஹரிகிருஷ்ணனை கைது செய்து, ஆத்துார் நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நந்தகுமாரை, தொடர்ந்து தேடிவருகின்றனர்.

