/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று இரவு விடிய விடிய அபிேஷகம் நாளை ஆருத்ரா தரிசனம்
/
இன்று இரவு விடிய விடிய அபிேஷகம் நாளை ஆருத்ரா தரிசனம்
இன்று இரவு விடிய விடிய அபிேஷகம் நாளை ஆருத்ரா தரிசனம்
இன்று இரவு விடிய விடிய அபிேஷகம் நாளை ஆருத்ரா தரிசனம்
ADDED : ஜன 02, 2026 05:11 AM
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று இரவு விடிய விடிய அபிேஷகம், நாளை ஆருத்ரா தரிசனம் நடக்க உள்ளது.
இதுகுறித்து சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் அம்சா அறிக்கை:திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, ஜன., 2(இன்று) நள்ளி-ரவு, 12:15 மணி முதல், விடிய விடிய காலை, 6:00 மணி வரை நடராஜருக்கு பல்வேறு வித அபிஷேகங்கள் நடக்க உள்ளன.
கோவிலுக்கு நேரில் வந்து தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள், அவரவர் இடத்தில் இருந்தே, நடராஜர் அபிேஷகத்தை நேரலை-யாக, 'யு - டியூப்'பில் பார்க்க, கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்-பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜன., 3ல்(நாளை), ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, மூலவர் சுகவனேஸ்வரருக்கு தங்க நாகாபரணம், சுவர்ணாம்பிகை அம்ம-னுக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்படும்.
தொடர்ந்து சிவகாமி அம்மன் சமேத நடராஜ பெருமான், சந்த-னகாப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்று, வழக்கமான மண்ட-கப்படிகளில் சிறப்பு பூஜை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று திருக்கல்யாணம்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் இன்று இரவு திருக்கல்-யாணம் நடக்கிறது. நாளை காலை, 10:00 மணிக்கு நடராஜர், அம்பாள் சிவகாமசுந்தரிக்கு வாசனை திரவியங்களால் அபி-ஷேகம், பின் சுவாமி, அம்பாளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை நடக்க உள்ளது.
மாலையில், சுவாமி திருவீதி உலா வரும்போது, சுவாமியிடம் கோபித்துக்கொண்டு அம்பாள் தனியே கோவிலுக்குள் வந்ததும், கோபுர கதவு சாற்றப்படும். பின் கோவிலுக்கு வரும் சுவாமி, இரு-முறை கதவை தட்டி திறக்காமல், 3ம் முறை தட்டும்போது திறக்-கப்படும்.
கோவிலில் சுவாமிக்குள் நடக்கும் இந்த ஊடல், கூடல் வைப-வத்தில், பக்தர்கள் தரிசிக்க கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்-ளது.

