/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தின்றி கொண்டாட்டம் போலீசாருக்கு பாராட்டு
/
விபத்தின்றி கொண்டாட்டம் போலீசாருக்கு பாராட்டு
ADDED : ஜன 02, 2026 05:10 AM
சேலம்:சேலம் மாநகர், மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை, பல்வேறு இடங்களில் ஆங்கில புத்தாண்டு கோலா-கலமாக கொண்டாடப்பட்டது. மாநகர் பகுதிகளில் ஆங்காங்கே சாலையில் திரண்ட இளைஞர்கள், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கியும், வாழ்த்து தெரிவித்து உற்சாகம் அடைந்தனர்.
ஓட்டல், விடுதி, புது பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மக்கள், 'கேக்' வெட்டினர். அதேபோல் ஓமலுார், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி, ஏற்காடு, வாழப்பாடி, ஆத்துார் உள்பட மாவட்டம் முழுதும் கொண்டாடினர்.மாநகரில் முக்கிய சாலைகள், பஸ் ஸ்டாண்ட், குழந்தை இயேசு பேராலயம் உள்ளிட்ட தேவாலயங்கள், மக்கள் கூடும் இடங்-களில் என மாநகர் முழுதும், 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒலிபெருக்கி மூலம் அதிவேகமாக இருசக்கர வாக-னங்களை ஓட்டி வரக்கூடாது என எச்சரித்தனர். மாநகர் முழுதும் விடிய விடிய சோதனை நடத்தியதால் விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.
அதேபோல் மாவட்டத்தில், 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணித்தனர்.
இதனால் மாவட்டத்திலும், எந்த விபத்தும் இல்லாமல், ஆங்-கில புத்தாண்டு பிறந்தது. பாதுகாப்பு பணியை, போலீசார் சரியாக கையாண்டதால், எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை, மாநகர போலீஸ் கமி-ஷனர் அனில்குமார் கிரி, மாவட்ட எஸ்.பி., கவுதம் கோயல் பாராட்டினர்.

