தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கத்தியால் பெயின்டரை குத்தியவருக்கு வலை

கத்தியால் பெயின்டரை குத்தியவருக்கு வலை

கத்தியால் பெயின்டரை குத்தியவருக்கு வலை


ADDED : ஜன 17, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், கருப்பூர், சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ்-குமார், 37. பெயின்டரான இவருக்கு திருமணமாகி கருத்து வேறு-பாடால், இரு ஆண்டாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். நேற்று முன்தினம் அவர், அதே பகுதியை சேர்ந்த தனுஷ், சேட்டு ஆகியோர், மாங்குப்பை ரயில்வே கேட் அருகே பேசிக்கொண்டி-ருந்தனர்.

அங்கு வந்த நவீன்காந்த், முன்விரோதம் காரணமாக தகாத வார்த்-தைகளில் திட்டியுள்ளார். தொடர்ந்து கத்தியால், சந்தோஷ்கு-மாரை குத்தி கொலை மிரட்டல் விடுத்து, நவீன்காந்த் தப்பிச்-சென்றார். படுகாயம் அடைந்த சந்தோஷ்குமாரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நேற்று அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us