தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேலாளர், ஜவுளி வியாபாரி மாயம்

மேலாளர், ஜவுளி வியாபாரி மாயம்

மேலாளர், ஜவுளி வியாபாரி மாயம்


ADDED : அக் 16, 2026 03:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 03:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்: தாரமங்கலம், கே.ஆர்.தோப்பூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பிரம்மநாயகம், 27. சேலம் பால் பண்னை அருகே உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.

கடந்த, 12ல் வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி புறப்பட்டார்.

ஆனால் அந்த நிறுவன உரிமையாளர், பிரம்மநாயகம் வேலைக்கு வரவில்லை என, அவரது மனைவி பெமிலா பிளஸ்சியிடம் தெரிவித்துள்ளார்.பின் அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் எங்கு தேடியும் கிடைக்காததால், பெமிலா பிளஸ்சி புகார்படி, தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.

சேலம், கொண்டலாம்பட்டி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த, ஜவுளி வியாபாரி மகேந்திரகுமார், 42. இவர் கடந்த, 13ல், வியாபாரத்துக்கு பெங்களூரு சென்ற நிலையில் திரும்பி வரவில்லை. அவரது குடும்பத்தினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரது தந்தை சித்துராஜ், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us