/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐயப்பனுக்கு மண்டல பூஜை நிறைவு வைபவம்
/
ஐயப்பனுக்கு மண்டல பூஜை நிறைவு வைபவம்
ADDED : டிச 27, 2024 01:15 AM
சேலம், டிச. 27-
சேலம், குரங்குச்
சாவடி சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில், கார்த்திகை முதல் நாள் மண்டல பூஜை தொடங்கியது. 41 நாட்கள் பூஜை நடந்து, மண்டல பூஜை நிறைவு வைபவம் நேற்று நடந்தது. இதனால் அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், நெய் அபிேஷகம், அஷ்டாபிேஷகம், உஷ பூஜை வைபவம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு ஐயப்பனுக்கு பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தங்க கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், அர்ச்சனைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மாலையில் குருசாமி வினு தலைமையில், சுவாமிக்கு குரு பூஜை நடந்தது. தொடர்ந்து புஷ்பாபிேஷகம் நடந்தது. பின் படி பூஜை வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், ஐயப்ப மாலை அணிந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் ஜன., 1ல் மகர விளக்கு பூஜை தொடங்கி, 15 நாட்கள் நடைபெறும். அதுமட்டுமின்றி புத்தாண்டை முன்னிட்டும், ஐயப்பனுக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட, 25,000 ஆயிரம் லட்டுகள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என, கோவில்
நிர்வாகிகள் தெரிவித்தனர்.

