/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோட்டை அழகிரிநாதர் கோவிலில்மண்டல பூஜை நேற்று துவக்கம்
/
கோட்டை அழகிரிநாதர் கோவிலில்மண்டல பூஜை நேற்று துவக்கம்
கோட்டை அழகிரிநாதர் கோவிலில்மண்டல பூஜை நேற்று துவக்கம்
கோட்டை அழகிரிநாதர் கோவிலில்மண்டல பூஜை நேற்று துவக்கம்
ADDED : ஏப் 22, 2025 01:12 AM
சேலம்:கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று மண்டல பூஜைகள் துவங்கின.
சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. கும்பாபி ேஷகம் முடிந்த பின், 48 நாட்கள் மண்டல பூஜை நடத்தப்படுவது வழக்கம். ஆனால், அழகிரிநாதர் கோவிலில் ஆண்டுதோறும், 10 நாட்கள் நடக்கும் வைகாசி பிரமோற்சவ தேரோட்ட விழா நடத்த வேண்டியுள்ளதால், 48 நாட்களுக்கு பதில் அரை மண்டலமாக, 24 நாட்கள் மண்டல பூஜை நடத்தப்படும். நேற்று துவங்கிய மண்டல பூஜை மே, 14ல் நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி, தினசரி மூலவர் பெருமாளுக்கு காலை 10:00 முதல் 12:00 மணிக்குள் அபிேஷகம், அலங்காரம் செய்து மண்டல பூஜை நடக்கும். வைகாசி பிரமோற்சவ விழா மே,31ல் துவங்கும். ஜூன், 10ல் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வெங்கடேஸ்வரி சரவணன் மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் அனிதா, கோவில் பட்டாச்சாரியார்கள் சுதர்சன், கவுதம் மற்றும் கட்டளை உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.