ADDED : அக் 24, 2026 04:01 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் மேக்னசைட் - ஓமலுார் ரயில்வே தண்ட-வாளம் அருகே, நேற்று, 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் உடல், இரு துண்டாகி கிடந்தது.
இதை அறிந்து, அங்கு சென்ற ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோத-னைக்கு அனுப்பினர்.போலீசார் கூறுகையில், 'இன்று(நேற்று) காலை தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு ஒருவர் பலியாகி உள்ளார். பச்சை நிற கோடு போட்ட சட்டை, சிமென்ட் நிற பேன்ட் அணிந்துள்ள அவருக்கு, 35 வயது இருக்கலாம். அவரது விபரம் குறித்து, அருகே உள்ள கிரா-மத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியவில்லை. வெளியூரை சேர்ந்தவரா என விசாரிக்கப்படுகி-றது' என்றனர்.
