ADDED : டிச 21, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச. 21-
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., இந்து மக்கள் கட்சி, காங்., - நாடார் பேரவையை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், அந்தந்த கட்சி, பேரவையில் இருந்து விலகினர். அவர்கள், ஊத்துக்குளி ஒன்றிய, அ.தி.மு.க., செயலர் தனசேகரன், பேரூர் செயலர் சரண்பிரபு ஏற்பாட்டில் நேற்று, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், பொதுச்செயலர், இ.பி.எஸ்., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து, இ.பி.எஸ்., வரவேற்றார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலர் கருப்பண்ணன், பெருந்துறை, எம்.எல்.ஏ., ஜெயக்குமார், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலர் அருள்ஜோதி, பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் உள்பட நிர்வாகிகள்
உடனிருந்தனர்.

