/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரத்தான் போட்டி;252 பேர் பங்கேற்பு
/
மாரத்தான் போட்டி;252 பேர் பங்கேற்பு
ADDED : நவ 16, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்;சேலம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அறிஞர் அண்ணாதுரை மாரத்தான் போட்டி, காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி தொடங்கி வைத்தார்.
அதில், 17 முதல், 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு, 8 கி.மீ., பெண்களுக்கு, 5 கி.மீ.,; 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., என, போட்டிகள் நடத்தப்பட்டன. 154 ஆண்கள், 98 பெண்கள் என, 252 பேர் பங்கேற்றனர். முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டன.

