ADDED : ஜன 20, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி, சங்ககிரியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது. தாலுகா செயலர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் குழந்தைவேலு தொடங்கி வைத்தார்.
பயணியர் விடுதி சாலையில் புறப்பட்ட நடைபயணம், திருச்செங்கோடு பிரிவு சாலையில் நிறைவடைந்தது. அதில் சங்ககிரியில் அம்பேத்கர் சிலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி, துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினர். மா.கம்யூ., சேலம் மாவட்ட செயலர் சண்முகராஜா, விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலர் ராமமூர்த்தி, ஆதிதமிழர் பேரவை, காங்., ம.தி.மு.க., வி.சி., கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.