ADDED : ஆக 28, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், அரசநத்தம் மாரியம்மன் கோவிலில் நேற்று, தேர் திருவிழா நடந்தது. இதை ஒட்டி மூலவர் மாரியம்மனுக்கு, பல்வேறு அபி ேஷக பூஜை நடந்தது.
மாலையில், 20 அடி உயர தேரை, ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து, முக்கிய வீதிகள் வழியே இழுத்துச்சென்றனர். இரவு, 7:00 மணிக்கு தேர் கோவிலை அடைந்தது. இதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஆத்துார் மேற்கு ஒன்றிய செயலர் ரஞ்சித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.